மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன் 2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் 2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மேலும் மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும், மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான செயல்திடடம் நிறைவுபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
WhatsApp us