பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியின் நினைவு தினத்தின் போது ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில், கடந்த 2016ம் ஆண்டு ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டான்.
வரும் 8ம் தேதி புர்ஹான் வானியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்காக 6 முதல் 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புல்வாமா மாவட்டத்துக்குள் ஊடுவியிருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
WhatsApp us