மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜ., ஏற்காது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆய்வுக்காக அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக, மக்களை ஏமாற்றி வருகிறது. 50 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என மக்களுக்கு துரோகம் செய்தனர். அது இதுவரை தொடர்கிறது. இன்னும் தொடர வேண்டுமா? ஸ்டாலினை முதலில் கட்சியை காப்பாற்ற சொல்லுங்கள். 67 ஆண்டுக்கு முன்னர், பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அவர்களால், மாநிலத்தில் வளர்ச்சியில்லை.
பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகத்தின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும். ராஜாஜி, காமராஜ் உள்ளிட்டோரின் தன்னிகரில்லா ஆட்சியாலும், அவர்கள் அமைத்த அடித்தளம் தான் வளர்ச்சிக்கு காரணம். இவ்வளவு காலம் இது தாக்குப்பிடித்தது. இனிமேலும் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான் என்று அவர் கூறினார்.
