நடிகர் அமிதாப்பச்சனின் டிவிட்டர் கணக்கை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர்.
தன்னை பற்றிய செய்திகள், கருத்துக்கள், நாட்டு நடப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றை அவர் பகிர்ந்து வருகிறார். டிவிட்டரில் கோடிக்கணக்கானோர் இவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அமிதாப் பச்சனின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்ஸ், டிவிட்டரின் முகப்பில், அமிதாப்பச்சன் புகைப்படத்துக்கு பதிலாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி சில தகவல்களையும் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கியை சேர்ந்த ஹேக்கர்கள் அமிதாப்பச்சனின் டிவிட்டர் கணக்கை முடக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
WhatsApp us