சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 70 அடி ஆழ விவசாயக் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டனர்.
பூசாரிப்பட்டி வைரங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது மாட்டை விவசாயக் கிணற்றுக்கு அருகே கட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று குறைத்ததில் அரண்டு ஓடிய மாடு, 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது.
தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் இருட்டிவிட்ட நிலையில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் இரண்டரை மணி நேரம் போராடி மாட்டை பத்திரமாக மேலே கொண்டுவந்தனர்.
WhatsApp us