அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்களின் நிலை இருக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்பொழுது நடிகர் ரவீந்திர ஷியாம் நாராயண் சுக்லா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
வெளிநாட்டு பசுக்களுக்கு இணையாக உள்நாட்டு பசுக்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், உள்நாட்டு பசுக்களை பாதுகாக்கும் தொடர் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார்.
அடுத்த 5 வருடங்களில் இந்த நடவடிக்கை நல்ல பலனை கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
WhatsApp us