தமிழ்

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்

indsamachar news

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். அளித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான பதில் மனுக்கள் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரோகிண்டன் நாரிமன், இந்து மல்கோத்ரா,சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
56 சீராய்வு மனுக்கள், 4 ரிட் மனுக்கள் என ஏராளமான மனுக்கள் விசாரிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதங்களை முன்வைத்தார் அதில் – சபரிமலை விவகாரம் அரசியல் சாசன பிரிவு 15 எதிரான என கூறுகின்றனர்.ஆனால் அவ்வாறு கிடையாது, அரசியல் சாசி பிரிவு 15 (2) என்பது மத விசயங்களுக்கு பொருந்தாது.சபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவதை தீண்டாமையோடு ஒப்பிடுகிறார்கள். அது அப்படி கிடையாது. மத நம்பிக்கைன் காரணமாகவே பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லையே தவிர தீண்டாமையால் கிடையாது.

நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கருத்து – தீண்டாமை இல்லை என வாதம் வைக்கிறீர்கள், பிற்படுத்தப்பட்ட பெண்கள், கோவிலுக்குள் அனுமதிக்காபோது அவ்வாறு தானே நினைத்துக்கொள்வார்கள்.

மோகன் பராசரன் – சபரிமலை கோவிலும் தீண்டாமையோ, சாதி, மத பாகுபாடோ எதுவும் இல்லை. உரிய கோவில் மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமாலும் வரலாம், அவ்வாறான மரபு தான் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அனுமதிக்காமல் இருப்பது.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது வெறும் தீண்டாமை விஷ்யத்தை மட்டும் கருத்தில் கொண்டு அல்ல. மேலும் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது- நீதிபதி ரோகிண்டன் நாரிமன்

தலைமை தந்திரி சார்பில் மூத்த வழக்கறிஞர் கிரி வாதம் : எந்த ஒரு தனித்துவ , பிரத்தேக (exclusionary) நம்பிக்கை பல ஆண்டு காலமாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றதோ, அது எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சொல்ல முடியும்.குறிபிட்ட வயதுடைய பெண்களை அனுமதிக்காமல் இருப்பது எவ்வாறு தீண்டாமை ஆகும். ஏனெனில் இது போன்ற பிரத்தேக வழிபாடு இந்து மதத்தில், மத வழிபாட்டின் அடிப்படை நம்பிக்கை ஆகும்.இது அந்த கோவிலில் குடிக்கொண்டுள்ள தெய்வதின் குணாதிசயங்களை கொண்டு முடிவெடுக்கப்படுகிறது

எனவே 10-50 வயது பெண்களை சபரிமலையில் அனுமதிக்காதது என்பது இந்து மத நம்பிக்கையின் பேரில் காலம் காலமாக கடை புடிக்கப்பட்டுவதும் மரபு, நம்பிக்கை , எனவே இதை தீண்டாமை, சுதந்திர வழிபாட்டை தடுப்பது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது

தேவசம்போர்டின் முன்னாள் தலைவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி வாதங்களை வைக்கிறார்- ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரபானது இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது மக்களின் நம்பிக்கை சார்ந்தது.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கவே படுவதில்லை என இல்லை, ஜாதி மதம் பார்க்கப்படுவதில்லை, தீண்டாமை பார்க்கபடுவதில்லை, பாகுபாடு பார்க்கப்படுவதில்லை, உயர்வு தாழ்வு பார்க்கப்படுவதில்லை. குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரே காரணம் மத நம்பிக்கை.

ஒரு மனுதாரர் தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே : இந்த விவகாரம் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் உள்ளது அல்ல மாறாக இது குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட community சார்ந்த உள் விவகாரம்.

அதேபோல இது ஒரு மதம் சார்ந்த மரபு, சம்பிரதாயம், நம்பிக்கையாகும் எனவே இவற்றை ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே பார்க்க வேண்டுமே தவிர, தீண்டாமை, உரிமை மறுப்பு என்ற கண்ணோட்டத்தில் காணக்கூடாது,மதம் சார்ந்த நம்பிக்கை ஆகும் எனவே இந்த கண்ணோட்டத்தில் காணவேண்டும்.

மூத்த வழக்கறிஞர் வெங்கட ரமணி வாதம் :
இந்து மதத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகின்றன, அனைத்தும் மத ரீதியாக மிக முக்கியமானதாக பல ஆண்டு காலமாக நம்பிக்கை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது.

சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை மட்டும் அனுமதிப்பதில்லை என்றால், அது நம்பிக்கை, சம்பிரதாயம், நடைமுறை.சம்பிரதாயங்கள், சடங்குகள் இல்லை என்றால் இந்து மதமே இல்லை, மேலும் பல மதங்களில் பல்வேறு நடைமுறைகள், சம்பிரதாயங்கள் உள்ளன.

கேரள அரசு: 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். இது ஒரு தனிநபரின் வாழ்வில் பெரும்பகுதி இழந்ந்துவிடுகிறார். இதை எப்படி சமநிலை என நாம் சொல்ல முடியும்.

ஐய்யப்பன் கோவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது. அப்படி என்றால் ஐயப்பன் கோவில் பொதுவானது. பொதுவான ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என சொல்லுவது அனைவரும் சமம் என அரசியல் சாசனம் சொல்லுவதற்கு எதிரானது

பந்தல ராஜா குடும்பம் வழக்கறிஞர் சாய் தீபக் வாதம் : பிரம்மச்சாரியம் பல வகையுண்டு, அதில் நாஷ்டிக பிரம்மச்சரியம் என்பது எதிர் பாலினத்திடமிருந்து விலகி இருத்தல் ஆகும்.

அந்த வகையில் சபரிமலை அய்யப்பன், குறிப்பிட்ட வயதுடைய எதிர் பாலினத்திடமிருந்து
விலகி இருக்கிறார். அதையே நம்பிக்காக, சம்பிரதாயமாக, மத கோட்பாடாக காலம் காலமாக கடை பிடித்து வருகின்றனர், எனவே அது குறிப்பிட்ட மதத்தில் மக்களின் நம்பிக்கை எனவே இது தீண்டாமை என கூற முடியாது

வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் : இந்தியாவில் பல இடங்களில் உள்ள கோயில்களில், வழிபடுவதற்காக பாலின பாகுபாடு பார்க்கப்படுகிறது, அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை

கேரள அரசு தரப்பு வாதம்: இந்த வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தேவையே இல்லை.இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஆழ்ந்து ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளது.வழிபாடு மறுப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமையை பறிப்பது, இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

மேலும் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அனுமதிப்பதில்லை என்பது தீண்டாமையே,ஏனெனில், மாதவிடாய் காரணங்களை காட்டி மறுப்பது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்
திருப்பதி, காசி விசுவநாதர் கோயில் போன்றவை எல்லாருக்கும் பொதுவானது. அந்த கோவில்களில் எத்தகைய பாகுபாடும் பார்ப்பதவில்லை.இதனை டினாமினேஷன் அல்லாத கோவில் என அழைப்போம். அப்படி சபரிமலை ஐயப்பன் கோவிலும் டினாமினேஷன் அல்லாத கோவில் தான்.

மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடலாமா என்றால் நிச்சயம் தலையிடலாம். அரசியல்சானத்திற்கு எதிராக எதாவது மத நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடலாம்.

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதம் : எந்த வழக்கமும், சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

நீதிபதி இந்து மல்கோத்ரா : வழக்கு விசாரணையின்போது தேவஸ்வம் போர்டு பெண்களை அனுமதிக்கக்கூடாது என வாதிட்டதே

தேவஸ்வம் போர்டு தரப்பு : தற்போது தேவஸ்வம் போர்டு நீதிமன்ற தீர்ப்பை மதித்து , ஆதிரிப்பதாக முடிவெடுத்துள்ளது, எனவேதான் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என வாதிடுகிறோம்,

மேலும் நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தேவையில்லை.

சபரிமலைக்கு சென்ற பெண்கள் சார்பில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதங்களை வைத்தார்.

பெண்கள் சபரிமலை சென்றதால் கோவிலின் தூய்மை கெட்டுவிடதாக கூறி கோவிலை அடைத்து சுத்தம் செய்கிறார்கள்: பிந்து தரப்பு குற்றச்சாட்டு.

இந்திரா ஜெய்சிங்: பெண்களை அணுமதிக்கும் தீர்ப்பை மாற்றக்கூடாது. நீதிபதிகள் அரசியல்சாசனத்தின் அடிப்படை விஷயத்தை பார்த்தாலே இந்த தீர்ப்பை மாற்றக்கூடாது என புரிந்துகொள்ளலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு சென்று வந்த இரண்டு பெண்களும் சமுதாயத்தில் பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதனை நீதிபதிகள் கருத்தில் கொள்ள வேண்டும்: இந்திரா ஜெய்சிங் வாதம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். மேலும் எழுத்துப்பூர்வமான கூடுதல் பதில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளித்தனர்.

21 Comments

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us