சமீபத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி பல கேள்விகள் எழுப்பப்பட்டது. எனவே, உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறார் இல்லங்கள், மாணவியர், பணியாற்றும் பெண்கள் விடுதிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை விதித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பதிவு பெற்ற விடுதிகளின் பெயர்பட்டியல், முகவரியோடு டிச.31க்குள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று, உரிமம் பெற வேண்டும் என்றும் உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும் என்றும் ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டடம் அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
