பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் அமித்ஷா உள்ளதால், கட்சி விவகாரங்களில் அதிகமாக கவனம் செலுத்த இயலாது என அவர் கூட்டத்தில் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இதனால் தேசியத் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குவது பற்றி ஆலோசித்த போது, அமித்ஷாவே தலைவராக தொடரவேண்டும் என ஆட்சி மன்றக் குழுவினர் வலியுறுத்தியதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
