ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஆப்கானிஸ்தான் / பாக்கிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அல் கொய்தா உறுப்பினரும் உசாமா பின்லேடனின் மகனுமான ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார்” என்று டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஹம்சா பின்லேடன் பல்வேறு பயங்கரவாத குழுக்களைத் திட்டமிடுவதற்கும் கையாள்வதற்கும் பொறுப்பாக இருந்தார்.”
பின்லேடனின் மரணம் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது, ஆனால் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.
WhatsApp us