தமிழ்

ரூ.2,780 கோடி முதலீடு அமெரிக்காவில் ஒப்பந்தம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியுயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 2,780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரிட்டன் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியுயார்க் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றார். இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள கேட்டர்பில்லர், ஃபோர்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களுக்கு கிடைத்த சிறப்பான அனுபவத்தை எடுத்துக் கூறினர். மின்சார வாகனம், வானூர்தி, விண்கல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உகந்த மாநிலம் தமிழகம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழகம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜீன் மார்ட்டின் ((Jean Martin)), அகியுல் சிஸ்டம்ஸ் ((Aquil Systems)), சிட்டஸ் பார்மா  ((Scitus Pharma)) நுர்ரே கெமிக்கல்ஸ் ((Nurray Chemicals)), ஜோகோ ஹெல்த்  ((Jogo Health)), எமர்சன் ((Emerson)) உள்ளிட்ட 16 நிறுவனங்களுடன், தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் ((Haldia Petrochemicals)), நாப்தா கிராக்கர் ((Naphtha Cracker)) ஆகிய இரு நிறுவனங்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் உற்பத்தி ஆலை அமைக்க கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அங்கு சிறப்புரையாற்றிய அவர், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை தொடங்கி வைத்தார். 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள யாதும் ஊரே சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் , தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தி, முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது ஆலோசனைகளை பெறவும் உதவும்.

32 Comments

32 Comments

  1. Pingback: 안전바카라

  2. Pingback: concrete floor coating

  3. Pingback: دردشة بدون تسجيل دخول

  4. Pingback: pedigree english bulldog for sale

  5. Pingback: ariel dan bcl

  6. Pingback: buy cc online

  7. Pingback: wigs

  8. Pingback: Buy sweets

  9. Pingback: immediate edge

  10. Pingback: Bitcoin Era Review 2020

  11. Pingback: british dragon injectables steroids

  12. Pingback: fun88

  13. Pingback: performance automation

  14. Pingback: blowup sex doll build a with a real

  15. Pingback: rolex replika

  16. Pingback: credit card shop

  17. Pingback: go to this web-site

  18. Pingback: bilişim danışmanlık hizmeti

  19. Pingback: fb login facebook login

  20. Pingback: ถาดกระดาษ

  21. Pingback: nova88

  22. Pingback: Research

  23. Pingback: website

  24. Pingback: escorts directory

  25. Pingback: transgendered chat rooms

  26. Pingback: earn passive income

  27. Pingback: redirected here

  28. Pingback: microdose mushrooms near me

  29. Pingback: มาทำความรู้จักกับ Mpoker ผู้นำอันดับ 1 ของวงการเกมออนไลน์

  30. Pingback: https://cozyhome-n-hobby.proboards.com/thread/1775/opinion

Leave a Reply

Your email address will not be published.

15 − eleven =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us