அமெரிக்காவில் குடியேறும் அகதிகளைத் தடுப்பதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கும் விவகாரத்தில் அவசர நிலையை அறிவித்த அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நியுயார்க் உள்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள போதும் அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுப்புச் சுவர் அமைப்பதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சட்ட நடவடிக்கை மூலம் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒப்புதலின்றி தன்னிச்சையாக டிரம்ப் முடிவெடுத்து எல்லை சுவரை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியதற்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
