திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ வைபவம் நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் மலையப்ப சுவாமி பல்வேறு அலங்காரத்தில், பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சின்ன சேஷ வாகனத்தை வாசுகியாகவும் கொண்டு மாட வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷவாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் அவரது சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று மனம் உருகி கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏழுமலையான் இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பவனி வருகிறார்.
WhatsApp us