மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப வேளையில் மூன்று சிறுமிகள் பாதிரியாரிடம் ஆசி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் அவர் வரம்பு மீறியதாக கூறப்படுகிறது. மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்ததை கூறியதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மூன்று சிறுமிகளிடமும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.தேவாலயப் பணியிலிருந்து பாதிரியாரை இடைநீக்கம் செய்திருப்பதுடன், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு எர்ணாகுளம்-அங்கமாலி கத்தோலிக்க மறைமாவட்டம் அறிவுறுத்தியுள்ளது.
