அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அந்த மாநிலத்தின் பாலப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரியானாவில் 5 ஆண்டு காலத்தின் திறமையான முதலமைச்சரின் கீழ், வலிமையான ஆட்சியை கொடுத்ததோடு, வளர்ச்சி திட்டங்களையும் பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.
காஷ்மீரில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீர ர்கள் பலர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய மோடி, வீர ர்களை பறி கொடுத்த குடும்பத்தினரிடம் சென்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் தங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூற காங்கிரஸ் கட்சி தயாரா என்று வினா தொடுத்தார்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காங்கிரஸ் மறந்து விட்டதாக மோடி கூறினார். நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ளவும் காங்கிரஸ் தவறி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
காஷ்மீர் விவகாரத்தில் சிலர், நாடு, நாடாக சென்று தலையிடுமாறு கோரிக்கை விடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பெயர் குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாடினார். ஆனால் இப்போது உலக தலைவர்கள் அனைவரும் இந்தியாவின் பக்கத்தில் நிற்பதாக அவர் தெரிவித்தார்.
