ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ. 16.75 கோடி வரி பாக்கி உள்ளது. இதனால் போயஸ் கார்டன் இல்லம் 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது
என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்.
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கிக்காக அவரது வேதா இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது .2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட பட்டியலில் உள்ளது. சென்னை அண்ணா சாலை, மேரீஸ் சாலை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளும் முடக்கத்தில் உள்ளன
முடக்கத்தில் இருந்தாலும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை எனவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.