தமிழ்

மக்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஹாங்காங் அரசு

Hong Kong’s Carrie Lam formally withdraws extradition bill

ஹாங்காங்கை போராட்டக் களமாக மாற்றிய சர்ச்சைக்குரிய மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று மட்டும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஹாங்காங்வாசிகளின் போராட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், “ஒரே நாடு-இரு முறைகள்” என்ற அடிப்படையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாக மண்டலமாக சீனாவால் அங்கீகரிக்கப்பட்டது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்றாலும், ஆட்சி முறையும், பொருளாதார முறையும் சீனாவிலிருந்து மாறுபட்டதாக தனித்தன்மையுடன் பராமரிக்கப்படுகிறது. இதனால், சீனர்கள் என்பதைவிட ஹாங்காங்வாசிகள் என்பது தனி அடையாளமாகவே பேணப்படுகிறது. ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவராக, சீன அரசின் ஆதரவு பெற்ற கேரி லாம் ((Carrie Lam)) என்ற பெண்மணி உள்ளார். இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு கொண்டுசென்று விசாரிக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு ஹாங்காங்வாசிகளிடையே கடும் எதிர்ப்பு உருவாகி போராட்டங்கள் வெடித்தன.

போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து சுயேச்சையான விசாரணை, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பது, ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலவரக்காரர்கள் என குறிப்பிடுவதை கைவிடுவது ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்தன. ஆட்சிமன்ற பிரதிநிதிகளையும், தலைமை நிர்வாகியையும் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமைக்கான கோரிக்கையும் போராட்டக்காரர்களாக முன்வைத்தனர். இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த, குற்றவழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் திரும்பப் பெற்றுள்ளார். இருப்பினும் 5 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என போராட்டக்காரர்கள் ஏற்கெனவே கூறியிருப்பதால், போராட்டங்கள் ஓயுமா என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. போராட்டங்களுக்கு பணிந்து, சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக திரும்பப் பெற்றாலும் மற்ற 4 கோரிக்கைகளை கேரி லாம் ஏற்கவில்லை.

சட்டம்-ஒழுங்கை மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறியுள்ள கேரி லாம், மோதல்களை உரையாடல்களாக மாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங் போராட்டங்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் காரணமாகவும், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு விழா அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவுமே சர்ச்சைக்குரிய மசோதா முழுமையாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

35 Comments

35 Comments

  1. Pingback: Videogames

  2. Pingback: Best CBD Oil websites

  3. Pingback: sbobet

  4. Pingback: axiolabs pharmaceuticals canada

  5. Pingback: Leptitox Review

  6. Pingback: replica panerai luminor titanium

  7. Pingback: buy/order ACDC Vape Cartridge online use for pain, anxiety, sleep for sale near me bulk in usa uk nz canada australia overnight delivery cheap

  8. Pingback: blazing trader

  9. Pingback: app-bitcoinloophole.com

  10. Pingback: 안전공원

  11. Pingback: sell dumps online

  12. Pingback: rainbow 6 siege pc cheats

  13. Pingback: trusted online casino

  14. Pingback: replica watches

  15. Pingback: https://library.kiu.ac.ug/

  16. Pingback: Replica Watches

  17. Pingback: www.squeeqee.co.uk/carpet-cleaning-stevenage

  18. Pingback: facebook login account open

  19. Pingback: short gun

  20. Pingback: Azure DevOps Consulting

  21. Pingback: trực tiếp bóng đá

  22. Pingback: contactos mujeres

  23. Pingback: upx1688

  24. Pingback: sportsbet

  25. Pingback: plus d'info

  26. Pingback: เงินด่วน 10 นาที โอนเข้าบัญชี

  27. Pingback: เงินด่วน 10 นาทีโอนเข้าบัญชี ผ่อนรายเดือน

  28. Pingback: see post

  29. Pingback: Buy B plus Magic Mushroom Grow kit

  30. Pingback: debt consolidation

  31. Pingback: Where to Buy Magic Mushroom Spores USA

  32. Pingback: https://area51.to/go/out.php?s=100&l=site&u=https://devs.ng/winamax-nigeria-review/

  33. Pingback: เพิ่มติดตาม

Leave a Reply

Your email address will not be published.

19 − seven =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us