காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சாஹித்பாக் ((ZahidBagh)) என்ற கிராமத்தில் 55 ராஷ்டிரீய ரைஃபிள் படைப் பிரிவினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் ஐ.ஈ.டி. வகை குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எவருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்ற போதிலும் ராணுவ வாகனம் சேதம் அடைந்தது.
புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் படை போலீசார் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
