டாக்காவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவன் தன் உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருப்பதாகவும், கையில் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்ததையடுத்து விமானம் சிட்டகாங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கமாண்டோ படையினர் விமானத்தில் அதிரடியாக புகுந்து மிரட்டிய நபரை சுட்டுக் கொன்றனர்.
அவன் கையில் இருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவனிடம் வேறு ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ இல்லை. பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, விமான நிலையத்தை ராணுவத்தினர் சீல் வைத்து சோதனை நடத்தினர். விமானத்தில் இருந்த 150 பயணிகளும் பாதுகாப்புடன் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
