சென்னை: யாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து முக ஸ்டாலின் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை.
