தமிழ்

2019-2020க்கான முக்கிய சந்தையாக இந்தியாவை கருதும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம்

சென்னை: இந்திய வழியாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை அதிகப்படுத்தும் முயற்சியில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் 47 நாடுகளின் வழியாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தீவிர சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரங்களை திட்டமிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் எஸ்.எல்.டி.பி.பி இலங்கை ஏர்லைன்ஸுடன் கைக்கோர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவை குறிவைத்து, இலங்கையின் ஹோட்டல் அசோசியேஷன் (THASL) மற்றும் உள்ளூர் டூர் ஆபரேட்டர்கள் பல்வேறு அற்புதமான சலுகைகள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். த விமான கட்டணம் தள்ளுபடி, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் பல்வேறு சலுகைகைகளை அறிவித்துள்ளனர். அனைத்திலுமே 30% முதல் 60% வரை தள்ளுபடி கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகைகள் இந்தியாவுக்கு மட்டுமானது. இலங்கை இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் இலங்கை ஏர்லைன்ஸ் நெட்வொர்க் செயல்படுகிறது. வாரத்திற்கு 123 விமானங்கள் வந்து செல்கின்றன. அங்கு இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மதிப்பிற்குரிய சுற்றுலா அமைச்சர் இது குறித்து பேசுகையில், “புதிய இலவச விசா சலுகையின் மூலம், இலங்கைக்கு அதிகமான இந்தியர்களை வரவேற்கப்படுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “இந்திய சுற்றுலா துறைக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து நாங்கள் அடிக்கடி இந்தியாவுக்கு வருகை தருவோம். அதே போல் இந்திய பயணிகளை அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வரவேற்கிறோம். இலங்கையின் மாறுபட்ட மற்றும் பலதரப்பட்ட சுற்றுலா அம்சங்களை அனுபவிக்க தயாராகுங்கள். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ராமாயண சர்க்யூட் பகுதியில் இயங்குகிறது. மேலும் இந்தியாவில் இருந்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்க வைக்கவும் வேறு சில இந்திய பாரம்பரிய தளங்களிலும் இயங்குகிறது’’ என்றார்.

இலங்கைக்கான ஐந்து சுற்றுலா பேக்கேஜுகளை பயன்படுத்துபவர்கள், கொழும்பு, கண்டி, நுவரா எலியா, தம்புல்லா, சிகிரியா மற்றும் தென் கடற்கரை ஆகிய இடங்களில் தங்கி இளைப்பாறலாம். இந்த இடங்களில் எல்லா விதமான பொருளாதார வசதியுள்ள சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்றவாறு பல விருப்பங்களைக் கொண்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜூன் 10, 2019 முதல் செப்டம்பர் 30 , 2019 வரை தங்குவதற்கு செல்லுபடியாகும். இந்தியாவில் உள்ள டிராவல் ஏஜெண்ட்ஸ் நெட்வொர்க் மூல இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

திரு. யசந்தா டி சில்வா அமைச்சர் (வணிகம்), 2019-2020 ஆம் ஆண்டில் எந்தெந்த பிரிவுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை பற்றி விவாதித்தார். திருமணங்கள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்டவை பற்றி பேசினார். புதிய பிரச்சாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கவனம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நம் சலுகைகள் மற்றும் வாடிக்கையாளர் புரிதல் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக இலங்கை ஏர்லைன்ஸ் மேலாளர் திரு. எஸ் பி மோகன் பேசுகையில், “இலங்கை ஏர்லைன்ஸ் தென்னிந்தியாவில் ஒரு பெரிய இருப்பைக் கொண்டுள்ளது. தமிழகத்தின் 4 நகரங்களுக்கு வாரத்திற்கு 53 விமானங்களை இயக்குகிறது, அதாவது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை, பெங்களூருக்கு 14 வாராந்திர விமானங்கள் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2017/18 -ஐ, 2018/19- உடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு 12% சந்தை வளர்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி எம்.ஐ.சி.இ, பில்கிரிம் டூர்ஸ் மற்றும் இலக்கு திருமணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குழு சுற்றுலாவையும் ஊக்குவித்து அதிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம்’’ என்றார்.

இலங்கையின் சுற்றுலா தரவுகள்படி 2018 இல் 424,887 பேர் வருகை தந்துள்ளனர். அதில் 18.2 சதவிகிதம் இந்தியாவினுடையது. இது கடந்த ஆண்டை விட 10.5 சதவிகிதம் அதிகம். 2019 முதல் காலாண்டில் இலங்கை 7,40,600 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்டது. இலங்கைக்கு வருகை தரும் மொத்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரிக்கும் என்று இந்த தீவு நாடு நம்புகிறது.

இந்த ஆண்டு எம்.ஐ.சி.இ மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கான இலக்காக எழில்கொஞ்சும் சுற்றுலா தளங்களை படிப்படியாக மேம்படுத்துவதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23 Comments

23 Comments

  1. Pingback: press release distribution of press release

  2. Pingback: Replica womens watch

  3. Pingback: กู้เงินด่วนมหาสารคาม

  4. Pingback: top10best

  5. Pingback: replica omega constellation quartz 35mm

  6. Pingback: uniccshop.bazar

  7. Pingback: http://63.250.38.81

  8. Pingback: Dank Vapes flavors

  9. Pingback: Devops Services

  10. Pingback: rologia rolex

  11. Pingback: 프로툰

  12. Pingback: Engineering

  13. Pingback: cc dumps shop 2022

  14. Pingback: Bradford escorts

  15. Pingback: testoviron

  16. Pingback: Miami boat excursions

  17. Pingback: OnionDir onion address

  18. Pingback: go over here now

  19. Pingback: Study in Africa

  20. Pingback: site link

  21. Pingback: find out

  22. Pingback: oregon mushroom dispensary​

  23. Pingback: sciences4u

Leave a Reply

Your email address will not be published.

3 + 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us