பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
9 பொதுத்துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்படுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் ஆப்களில் தீயாய் பரவிய செய்திகள் வெறும் வதந்திகளே என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் ஏதுமில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படுவதாக கூறப்பட்ட வங்கிகள் பெரும்பாலானவை இதர வங்கிகளுடன் இணைக்கப்பட்டவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், இத்தகைய வதந்திகள் விஷமத்தனமானவை என்றும், பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த பெரிய அளவுக்கு நிதியை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
