துளையிடும் பணி 4வது நாளாக தீவிரம்
55 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது
90 அடி ஆழ் துளை அமைக்கும் பணி 17 மணி நேரமாக தொடர்கிறது
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி
நடுக்காட்டுப் பட்டியில் குழந்தையை வெளியே கொண்டுவர இடைவிடாத மீட்புப் பணி
வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது
2 வயதுக் குழந்தை சுர்ஜித்தை மீட்க 4-வது நாளாக இரவு பகலாக இடைவிடாத முயற்சி
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க அயராத போராட்டம்
குழந்தைக்கு இடைவிடாது ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது
ரிக் எந்திரம் மூலம் 1.2 மீட்டர் விட்டம், 90 அடி ஆழத்திற்கு துளையிடும் பணி நடைபெற்று வருகிறது
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து, இரண்டாவது ரிக் எந்திரம் வரவழைக்கப்பட்டது
மீட்பு பணியில், 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்துள்ள 88 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
88 பேரும் துறையூர், திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்தவர்கள்
மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன
நிகழ்விடத்தில் 12 மருத்துவர்கள் அடங்கிய 2 மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்புடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது
90 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்ட பின்னர் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கை
சுழற்சி முறையில் குழிதோண்டும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அவசர சிகிச்சை அளிக்கும் வசதியுடன் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன
மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் 5 அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர்
அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி…
மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தடையற்ற மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது
இன்று இரவுக்குள் மீட்புப் பணியை முடிக்க முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்
மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம்
மீட்புப் பணி குறித்த விவரங்களை ஓ.பி.எஸ். நேரில் கேட்டறிந்தார்
ஆழ்துளை அமைக்கும் பணிகள் குறித்து ஓ.பி.எஸ்.சிடம் அதிகாரிகள் விளக்கம்
2வது ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது
குழந்தை சுஜித்தின் குடும்பத்தினருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
இரண்டாவது எந்திரம் மூலம் குழிதோண்டும் பணி 4 மணி நேரமாக நீடிப்பு
நான்கு மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டப்பட்டதாக தகவல்
கடினமான பாறை இருப்பதால் தோண்டும் பணி தாமதம் எனத் தகவல்
ரிக் எந்திரத்தின் நுனிப் பகுதியில் ஏற்பட்ட சிறு பழுதை சரிசெய்யப்படுகிறது
பல்சக்கரத்தின் பழுதான பகுதியில் வெல்டிங் செய்து வருகின்றனர்
ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி மீண்டும் தொடக்கம்
பழுதான பல்சக்கரத்தை சரிசெய்து ஆழ்துளையிடும் பணியை தொடங்கினர்
கடினமான பாறை இருப்பதால் தோண்டும் பணி தாமதம் எனத் தகவல்
ரிக் எந்திரத்தின் “ட்ரில் பிட்”டில் ஏற்பட்ட சிறு பழுது சரிசெய்யப்பட்டது
“ட்ரில்பிட்” பகுதியில் வெல்டிங் செய்தபின் ஆழ்துளைப் பணி மீண்டும் தொடங்கியது
ரிக் எந்திரத்தின் “ட்ரில் பிட்”டில் ஏற்பட்ட சிறு பழுது சரிசெய்யப்பட்டது
“ட்ரில்பிட்” பகுதியில் வெல்டிங் செய்தபின் ஆழ்துளைப் பணி மீண்டும் தொடங்கியது
40 அடிக்கு கீழே பாறைகள் இருப்பதால் துளையிடும் பணி சவாலாக உள்ளது
பாறையைக் குடைந்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளனர்
குழந்தை நலமுடன் மீண்டுவர சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் பிரார்த்தனை
அதிதிறன் கொண்ட ரிக் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெறுகிறது
40 அடிக்கு கீழே பாறைகள் இருப்பதால் துளையிடும் பணி சவாலாக உள்ளது
பாறையைக் குடைந்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளனர்
கடினப் பாறையை தகர்க்கும்போது ரிக் எந்திரத்தின் ட்ரில்லிங் பிளேடுகள் உடைந்தன
உடைந்த ட்ரில்லிங் பிளேடுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர்
ட்ரில்லிங் பிளேடுகளை மாற்றியபின் ஆழ்துளை தோண்டும் பணி தற்போது தொடர்கிறது
ஆழ்துளை அமைக்கும் தனியார் நிறுவன காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது
குழந்தை சுர்ஜித்திடமிருந்து எவ்வித சத்தமோ, அசைவோ இல்லை-விஜயபாஸ்கர்
மாற்று வழியைக் கூறுங்கள் என வல்லுநர்களிடம் கேட்டுள்ளோம்-விஜயபாஸ்கர்
தற்போதுள்ள கருவிகளால் திட்டமிட்டபடி ஆழத்தை எட்ட முடியவில்லை-விஜயபாஸ்கர்
40 அடிக்கு கீழே மென்மையான பாறைகள் இருக்கக்கூடும் என எதிர்பார்த்தோம்-விஜயபாஸ்கர்
குழிதோண்டும் பணி பலனளிக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது-விஜயபாஸ்கர்
