இடைநிலை ஊடகமாக செயல்படுவதால் பயனாளர்கள் பரிமாறும் விஷயங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை கூறி வருகின்றன. வெறுப்பு பிரச்சாரம், போலியான செய்திகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் நடைபெறும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் வரைவு நிலையில் தயார் செய்துள்ள மத்திய அரசு, சட்ட அமைச்சகம், அதை பிற அமைச்சகங்களோடு ஆலோசனை நடத்தி இறுதி செய்ய உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இதை குறிப்பிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் ஊடகங்களுக்கான விதிமுறைகள் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் என தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலியான செய்திகள் வன்முறைக்கு வித்திடுவதுடன் தனிநபர்களின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்பதால், அவை எங்கிருந்து உருவாகின என்பதை கண்டறிவது அவசியம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
