இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகள் அதாவது 2021ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி நீடிப்பார் என்று தேர்வுக் குழு தலைவர் கபில்தேவ் அறிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார் ரவி சாஸ்திரி.
