முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி “சதைவ் அடல்” என்ற இடத்தில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். பாஜக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
