அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆஸ்கர் விழாவின் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு விட்டது. திரையுலகின் மிக உயரிய விருதுகளை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை அறிய பெருந்திரளாக நட்சத்திரங்கள் திரண்டவண்ணம் உள்ளனர். விதவிதமான ஆடைகளுடன் சிவப்புக் கம்பளத்தில் விருந்தினர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.இரண்டு மாதங்களாக நடைபெற்ற தயாரிப்புகள், முன்னேற்பாடுகளுக்குப் பிறகு இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு மொழிக்கான திரைப்பட வரிசையில் போட்டியிடும் “PERIOD. END OF SENTENCE,” “SKIN” மற்றும் “BLACK SHEEP” படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
