தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க, ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக, அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். மக்களவையில் தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் பேசினார்.
தமிழக அரசு சார்பில் ஒரே பிரதிநிதியாக தான் மட்டுமே இருப்பதாகவும், எதிர்தரப்பில் 37 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த புள்ளிவிவரப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அதனைத் தர தயாராக இருப்பதாகவும் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
WhatsApp us