ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் 190 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கல்லூரிகளும் இன்றுமுதல் இயங்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களும் முழு அளவில் இயங்கும் என்று தலைமைச் செயலர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். 50 காவல் நிலை சரகங்களில் கட்டுப்பாடுகள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தளர்த்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் அமைதி நிலவுவதாகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் கன்சால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. தொலைத் தொடர்பு ஊழியர்கள் இரவு பகலாக தொடர்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் திடீரென நேற்று மாலை முதல் ஜம்முவின் சில பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
