மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே சென்றது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரியில் விநாடிக்கு 18ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அந்த அளவுக்கு விரைவில் அதிகரிக்கும்.
