தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கொரும் என்ற ஷாப்பிங் மால் ஒன்றின் தரை கீழ் தளத்தில் ஓட்டல் ஒன்று உள்ளது. திடீரென அங்கு சிறுத்தை ஒன்று வந்து சென்றதை சிசிடிவி கேமராவில் ஊழியர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக வனத்துறை, காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒளிந்திருக்கும் சிறுத்தையைக் கண்டறிந்து மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.