காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்புப் படையினர் மீதான தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகிய வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
WhatsApp us