ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் காகித குவளைகளுக்கு மாற்றாக, தானியங்களால் தயாரிக்கப்பட்ட உண்ணத் தகுந்த குவளைகளை ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
ஈட் கப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இந்த குவளைகளில், குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை விநியோகிக்கலாம் எனவும், சுமார் 40 நிமிடங்கள் வரை ஊறிப் போகாமல் இந்த குவளைகள் நிலைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குவளைகளில் பரிமாறுவதால் பானங்களின் சுவையிலும் எந்த மாறுபாடும் ஏற்படாது எனவும், பானத்தை அருந்திய பின்னர் வாடிக்கையாளர்கள் குவளைகளையும் உண்ணலாம் எனவும் அவற்றை தயாரித்துள்ள தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுக்க முழுக்க இயற்கை தானியங்களைக் கொண்டு பழச்சாறுகள், தேநீர், காபி, சூப், தயிர் போன்ற அனைத்தையும் விநியோகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குவளைகள் ஊறிப்போகாமல் இருக்க எவ்வித ராசாயன பூச்சுகளையும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
