பாலியல் புகாரில் சிக்கிய லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
தன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.- ஐ.ஜி.முருகன் மனு
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்- ஐ.ஜி முருகன்
கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு தற்போது கலக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் பரிந்துரையின் பேரில் நடத்தப்படும் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் – முருகன்
ஐஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி கொடுத்த புகார் தொடர்பாக 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய விசாகா கமிட்டிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஐஜி முருகனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
