ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குதிரை சந்தை நடைபெறுகிறது. இங்கு ஆறாயிரம் ரூபாயில் இருந்து 60 லட்சம் வரையிலான குதிரைகள் விற்பனையாகின்றன.
அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை இந்த ஆண்டும் களை கட்டியுள்ளது. வடமாநிலங்களில் இருந்து காட்டியாவாடி இங்கிலீஷ் பிரிடு . சாப்ஜா, மார்வார் அப்லக் ஒயிட்லக் போன்ற விலை உயர்ந்த குதிரைகள் இந்த சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. திரைப்படங்கள், காவல்துறையினர் குதிரைப்படை வெளிநாட்டு விருந்தினர் வரவேற்பு என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் இந்த குதிரைகள் 6 ஆயிரம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை விலை கொண்டுள்ளன.
இதே போன்று உழவுக்குப் பயன்படும் மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், உள்ளிட்ட ஏராளமான கால்நடைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சந்தையை நோக்கி திரண்டுள்ளனர்
