தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை மழை பெய்தது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 13 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
