அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க இன்று ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
37-வது நாளான இன்று அத்திவரதருக்கு நீலநிறப் பட்டாடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர்.
இன்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். அத்திவரதரை தரிசிக்க சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கூட்டமாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பக்தர்கள் கூட்டம் காணப்படுவதால் காஞ்சிபுரத்துக்கு உள்ளேயும், வெளியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு வராமல் ஒத்துழைக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களில் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் 36 நாட்களில் சுமார் 57 லட்சத்து 50ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
WhatsApp us