முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு பாரத் ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது.
டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிராணப் முகர்ஜி கடந்த 2012-2017 ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார். நாட்டின் மேன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரணாப்புக்கு இந்த விருது வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.
அவருடன் பாரதிய ஜனசங்கத்தின் முக்கிய தலைவருமான நானாஜி தேஷ்முக் மற்றும் அஸ்ஸாம் மாநில பாடகர், பூபன் ஹஸாரிகாவுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவர்களில் நானாஜி தேஷ்முக் மற்றும் பூபன் ஹஸாரிகா ஆகியோருக்கு இறப்புக்குப் பிந்தைய விருதாக வழங்கப்பட உள்ளது.
