சென்னை அருகே ஆந்திர எல்லையில் மீன்பிடித்தபோது சரக்கு கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. சின்னத்துரை என்பவரது விசைப்படகு கடலில் மூழ்கியதால் மீனவர்கள் 11 பேர் பைபர் படகு மூலம் கரை திரும்பினர். கடலில் படகு மூழ்கியது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகு உரிமையாளர் சின்னத்துரை புகார் அளித்துள்ளார்.
