அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள், கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் மற்றும் கைரேகைகளை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமைக்கு வழங்க அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
அவற்றை நவம்பர் 4-ம் தேதிக்குள் சிபிசிஐடியிடம் வழங்க தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட்டனர். மேலும் நாமக்கல், பெங்களூரு நீட் பயிற்சி மையங்களிலிருந்து அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், வருமான வரித்துறை இயக்குனரை வழக்கில் இணைத்து, நவம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
