டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 81. முன்னதாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஷீலா தீட்சித் டெல்லியிலுள்ள போர்ட்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித், 1998ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக இருந்தார்.
2014ம் ஆண்டு கேரள மாநில ஆளுநராகவும் சிறிது காலம் பதவி வகித்துள்ளார். டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஷீலா தீட்சித் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
