பிரதமர் மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகமான முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை விமர்சனம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்று மோடி… மோடி… என வரவேற்பு முழக்கங்களை எழுப்புவதாகவும், இது காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பதவிக் காலத்தில் அதிக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
