வங்கதேச எல்லையில் இந்திய மீனவரை மீட்க முயன்ற இந்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஹில்சா என்ற மீனைத் தேடி வங்கதேச கடல் எல்லைக்குள் நுழைந்தனர். இதையடுத்து அவர்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விஜய் பான்சிங் என்பவர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று மீனவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மீனவர்களை மீட்டுச் சென்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற வங்கதேச பாதுகாப்புப் படையினர் மீது விஜய் பான்சிங் துப்பாக்கியால் சுட்டதாகவும், தற்காப்புக்காக தாங்கள் சுட்டதில் விஜய் பான்சிங் உயிரிழந்ததாகவும், மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளதாகவும் வங்கதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
