அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பியான்கா ஆண்டிரஸ்கியூ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சும், பியான்காவும் மோதினர்.
விறுவிறுப்பான இப்போட்டியில் 19 வயது இளம் வீராங்கனை பியான்காவை சமாளிக்க முடியாமல் செரினா வில்லியம்ஸ் பலமுறை தடுமாறினார். இறுதியில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பியான்கா வெற்றி பெற்றார்.
37 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைப் படைக்க இருந்த நிலையில் இளம் வீராங்கனையிடம் செரினா தோல்வியடைந்துள்ளார்.
