டெல்லி : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீடு வழக்கு விசாரணையில் அவர் நேரில் ஆஜராவதற்கான விலக்கு தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
