மத்திய கிழக்கு நாடுகளின் முதன்மையான அலுமினியம் உருக்காலைகளில் ஒன்றான அலுமினியம் பஹ்ரைன், தனது இரண்டு ஏற்றுமதி கடனுக்காக நிதி வழங்கும் இரண்டு வசதிகளை நிறுத்துவிட்டது. அந்நிறுவனம் தங்களது லைன் 6 விரிவாக்க திட்டத்தை முடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
மூடப்படும் இரண்டு கடன் வசதிகளில் இருக்கும் 136 மில்லியன் டாலர் மற்றும் 90 மில்லியன் யூரோ , லைன் 6 திட்டத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்க பயன்படுத்தப்படும்.
கனடாவின் ஏற்றுமதி வளர்ச்சித்துறை 136 மில்லியன் டாலர் நிதியிலும், ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி , நிப்பான் எக்ஸ்போர்ட் மற்றும் JBIC-NEXI ஆகிய நிறுவனங்கள் 90 யூரோ டாலர் நிதியிலும் ஆதரவளித்ததாகவும் திங்கட்கிழமை பஹ்ரையினில் நடந்த பங்கு வர்த்தகத்தில் அலுமினியம் பஹ்ரைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
