விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏழாயிரம்பண்ணையில் மெயின் பஜாரில் உள்ள கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா புகையிலையை கேட்டு சிப்பிப்பாறையை சேர்ந்த ராணுவ வீரர்களான சங்கத்துரை, ரமேஷ்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகியோர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், 3 பேரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
