புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இளைஞர் ஒருவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
குர்கான் பகுதியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞர் இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இருந்த அவரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதை அவர் சரியாக ஒப்படைக்காத காரணத்தால் அவருக்கு ரூ.23,000 அபராதத்தை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
