திருவள்ளூர் மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாமரைப்பாக்கம், பெரியபாளையம், பாடிநல்லூர், சோழவரம், செங்குன்றம், அலமாதி, புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலத்திற்கும் சொந்த உபயோகத்திற்கும் என்று அனுமதி பெற்றும் சில இடங்களில் அனுமதி பெறாமலும் தண்ணீர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் திருடப்பட்டு சென்னையில் வணிக பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் குறையும் நிலை உருவாகியுள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
