நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட இந்த பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் பயணித்தனர்.
குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்ற பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் 600க்கும் மேற்பட்ட போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
WhatsApp us